வெளிநாட்டினரைப் பொறுத்தவரை 13 ஒதுக்கப்பட வேண்டிய நம்பர். அத்துடன் வெள்ளிக்கிழமையும் சேர்ந்தால் அலறுவார்கள். இதற்கு என்னென்னவோ காரணங்கள் கூறுகிறார்கள். நம்பர் 13 எப்படியெல்லாம் வெளிநாட்டினரை பாடுபடுத்துகிறது என்று பாருங்களேன்..
ஒரு வெள்ளிக்கிழமை 13ம் தேதிதான் இயேசு பெருமான் சிலுவை யில் அறையப்பட்டார் என்கிறது வரலாறு.
இதேபோல் இன்னொரு 13ம் தேதியும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்த தினத்தில்தான் ஆதாமும் ஏவாளும் சபிக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டார்களாம்.
ஸ்காட்லாந்து விமான நிலை யத்தில் 13 என்ற எண்ணை பயன்படுத்துவதேயில்லை. மாறாக 12க்குப் பிறகு 12பி என்றுதான் பயன்படுத்துகிறார்கள்.
லுப்தன்ஸா விமானத்தில் 13 என்ற இருக்கை கிடையாது. 12க்குப் பிறகு 14தான்.
பார்முலா ஒன் கார் ரேஸில் கலந்து கொள்ளும் கார்களுக்கு 13ம் எண் வழங்கப்படுவதில்லை.
அப்போலோ 13 விண்கலம் வெற்றிகரமாகச் செயல்படாமல் திரும்பியதற்கு, 13 என்ற எண்ணை சேர்த்ததுதான் காரணம் என்கிறார்கள் அமெரிக்கர்கள்.
தொடர்ந்து 12 ஆண்டுகள் உலகின் முதல் பணக்காரராகக் கோலோச்சிய பில்கேட்ஸ், 13வது வருடம் அந்த அந்தஸ்தை இழந்துவிட்டதற்கு, 13 என்றே எண்ணே காரணமாம்.
அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் 13ம் தேதி அன்று பிறந்தாலோ அல்லது இறந்தாலோ அந்த எண்ணை பதிவேட்டில் பயன்படுத்தாமல் 12ஏ என்றே குறிப்பிடுகின்றனர்.
இப்படி 13ம் எண்ணைப் பற்றி வெளிநாடுகளில் நிறைய தகவல் கள் உண்டு.
No comments:
Post a Comment